28. திருமுழுக்கும், திருவிருந்தும்

1. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து திருமுழுக்கு மற்றும் திருவிருந்தாகிய திருநியமங்களைத் தெளிவாகவும் இறை ஆண்மையுடனும் ஏற்படுத்தி தனது திருச்சபையில் உலக முடிவுவரை அவை தொடரும்படியாக நியமித்துள்ளார்.

மத்தேயு 28:19,20; 1 கொரிந்தியர் 11:26.

2. இப்பரிசுத்த திருநியமங்கள் கிறிஸ்துவின் ஆணையின்படி தகுதிபெற்று அழைக்கப்பட்டவர்களால் மட்டுமே அனுசரிக்கப்பட வேண்டும். மத்தேயு 28:19; 1 கொரிந்தியர் 4:1.