மகவேற்பு

1. தன்னுடைய ஒரே குமாரனான இயேசு கிறிஸ்துவின் நிமித்தம் நீதிமான்களாக்கப்படுகிற அனைவரும் புத்திரசுவிகாரக் கிருபையில் பங்குகொள்ள உத்தரவாதம் அளிக்கிறார். இதன் மூலமாக அவர்கள் கடவுளுடைய பிள்ளைகளின் உரிமைப் பேறுகளையும், சிறப்புரிமைகளையும் அனுபவித்து மகிழும்படி அவரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். அத்துடன் கடவுளின் திருப்பெயர் அவர்கள் மேல் எழுதப்பட்டு புத்திரசுவிகார ஆவியையும் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். மேலும், கிருபாசனத்தண்டையில் தைரியமாய்ச் சேரும் வாய்ப்பும் கடவுளை “அப்பா, பிதாவே” என்று அழைக்கும் உரிமையும் அவர்களுக்கு அளிக்கப்படுகின்றது. கடவுள் அவர்களைத் தந்தையைப்போல இரக்கம் காட்டி, பாதுகாத்து, பராமரித்துக் கண்டிக்கவும் செய்கிறார். மேலும், அவர் அவர்களை ஒருபோதும் தள்ளிவைப்பதில்லை. ஆனால், அவர்கள் மீட்பின் நாளுக்கென்று தொடர்ந்து முத்திரையிடப்பட்டிருப்பதால் நித்திய இரட்சிப்பின் வாரிசுகளாக வாக்குத்தத்தங்களை சுதந்தரித்துக் கொள்கிறார்கள். சங் 103:13; நீதி 14:26; ஏசாயா 54:8,9; புலம்பல் 3:31; யோவான் 1:12; ரோமர் 8:15,17; 2 கொரி 6:18; கலாத்தியர் 4:4-6; எபேசியர் 1:5; 2:18; 4:30; எபிரெயர் 1:14; 6:11; 12:6; 1 பேதுரு 5:7; வெளி 3:12.