29. திருமுழுக்கு

1. திருமுழுக்கு இயேசு கிறிஸ்துவினால் ஏற்படுத்தப்பட்ட புதிய ஏற்பாட்டு திருநியமமாகும். திருமுழுக்கு பெற்ற ஒருவருக்கு கிறிஸ்துவின் மரணத்திலும், உயிர்த்தெழுதலிலும் உள்ள ஐக்கியத்தையும், கிறிஸ்துவோடு அவர் இணைக்கப்பட்டதையும், அவரது பாவங்கள் மன்னிக்கப்பட்டதையும் வெளிப்படுத்தும் அடையாளமாகக் காணப்படுகின்றது. திருமுழுக்கு பெற்றவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாகத் தன்னைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்துள்ளதால் புதிய ஜீவனுள்ளவராய் வாழ்க்கை நடத்துவார் என்பதையும் இது எடுத்துக்காட்டுகின்றது.

மாற்கு 1:4; அப்போஸ்தலர் 22:16; ரோமர் 6:3-5; கலாத்தியர் 3:27; கொலோசெயர் 2:12.

2. கடவுளிடம் மனந்திரும்பி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவருக்குக் கீழ்ப்படிய சித்தங் கொள்பவர்கள் மட்டுமே இத்திருநியமத்திற்கு முறையாகத் தம்மை ஒப்புக்கொடுக்கக் கூடியவர்கள்.

மாற்கு 16:16; அப்போஸ்தலர் 2:41; 8:12,36,37; 18:8.

3. இத்திருநியமத்தின் வெளிப்புறச் சாதனமாக தண்ணீர் பயன்படுத்தப்பட்டு, பிதா, குமாரன், ஆவி ஆகியோரின் பெயரில் விசுவாசிக்கு திருமுழுக்கு கொடுக்கப்பட வேண்டும்.

மத்தேயு 28:19,20; அப்போஸ்தலர் 8:38.

4. இத்திருநியமத்தின் முறையான அனுசரிப்புக்கு அமிழ்த்தல், அதாவது விசுவாசியின் முழு உடலையும் தண்ணீரில் முழுவதுமாக தாழ்த்தல் அவசியமாகும்.

மத்தேயு 3:16; யோவான் 3:23.